புதுடெல்லி: வாகனங்களை கட்டுப்பாடு இன்றி ஓட்டி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு நிறுவனங்கள் இழப்பீடு அளிக்க தேவை இல்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு அளித்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்த மல்லச்சந்திரா பகுதியை சேர்ந்த ரவிஷா கடந்த 2014 ல் அவரது கிராமத்திலிருந்து அரசிகேரை நகரத்திற்கு காரில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
வாகனத்தை ஓட்டிச் சென்று ரவிஷா உயிரிழந்ததை தொடர்ந்து மற்றவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டன. விபத்திற்கு “தேர்ட் பார்ட்டி” எனப்படும் பிரிவின் கீழ் 80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மனைவி மற்றும் குடும்பத்தினர் அரசிகேரியில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
விசாரித்த போது அதிவேகமாகவும், அலட்சியமாக வாகனத்தை இயக்கி காரணமாக இருந்தது அவரே என்று கூறியுள்ளனர். மேலும், சட்டபூர்வமான வாரிசுகளுக்கு இழப்பீடு பெறுவதற்கு உரிமை இல்லை என மனதை தள்ளுபடி செய்துள்ளது.
உயிரிழந்த ரவிஷாவின் குடும்பத்தினர் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மீண்டும் எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர். விசாரித்தபோது ரவிஷா ஓட்டிச் சென்ற கார் வேறொருவருக்கு சொந்தமானது என்றும், கடனாக ஓட்டி வந்ததாகவும், காப்பீட்டு நிறுவனம் இறப்புக்காக இழப்பீடு தொகையை மறுக்கக்கூடாது என்று எதிர்த்து வாதிடப்பட்டது.
மறுத்த உயர்நீதிமன்றம் வேறு ஒருவரின் வாகனத்தை ஓட்டி சென்றாலும் அப்போதைய உரிமையாளராகவே கருதப்படுபவர் என கூறியுள்ளது. வாகன உரிமையாளர் அலட்சியத்தால் இறப்பு அல்லது காயங்களுக்கு காப்பீடு நிறுவனம் பொறுப்பாகாது என கூறி உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் ரவிஷாவின் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை முடிந்து உத்தரவில் இறந்தவர்கள் அலட்சியமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதற்கு வாரிசுகள் இழப்பீடு கூற உரிமை அற்றவர்கள் என்றும், காப்பீடு நிறுவனம் இத்தகைய விபத்துகளுக்கு பொறுப்பேற்க தேவையில்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.