ஈரான் இஸ்ரேல் தாக்குதல்!! பென்டகனில் பீட்சா ஆர்டர்கள் அதிகரிப்பு!! பின்னணி என்ன ? 

Pizza orders surge at the Pentagon!!
பென்டகன்: அமெரிக்காவின் பென்டகன் சிட்டியில் பீட்சா ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஈரான் இஸ்ரேல் போர் தீவிரமாக நடைபெற்று இருக்கும் நிலையில் அமெரிக்கா பீட்சா ஆர்டர்களை அதிகரித்திருப்பது உலக நாடுகளின் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உலக நாடுகளின் மத்தியில் இந்த இஸ்ரேல் போரானது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சத்துடன் இருக்கின்றன. ஈரான், இஸ்ரேல் ஆகிய மத்திய கிழக்கு நாடுகள் தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஜூன் 13ஆம் தேதி நடந்த இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 600 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரகசிய ஆலோசனைகள் நடைபெறுவதால் அதிகாரிகள் வெளியில் சென்று சாப்பிட முடியாத நிலையில் பீட்சா ஆர்டர் செய்வது வழக்கமாக இருந்த நிலையில்  அதிகரித்துள்ளது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்பு தளமான பென்டகன் அருகில் உள்ள உணவகத்தில் பீட்சா ஆர்டர்கள் அதிகரித்து வருவது சந்தேகத்தை கிளப்புவதாக கூறுகின்றன.
ஜூன் 13 மாலை 6 மணி அளவில் பென்டகன் இல் உள்ள டோமினோஸ் போன்ற உணவகங்களில் கூட்டம் அதிகரித்திருந்ததாகவும், இரவு 11 மணி வரை பிஸியாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 1990 இல் ஏற்பட்ட பனிப்போர் காலத்தில் அதிக பீட்சா ஆர்டர்கள் செய்யப்பட்டது. பின் ஈராக், குவைத் ஆக்கிரமித்தது. அதனை தொடர்ந்து 1991இல் “ஆபரேஷன் டெசர்ட் ஸ்ட்ராங்” நடவடிக்கையின் பீட்சா டெலிவரி மேலும் அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் பீசா ஆர்டர்கள் அதிகரித்து வருகின்றன.
இதனை அடிப்படையாகக் கொண்டு ரகசிய ஆலோசனைகள் படி இந்த பீட்சா ஆர்டர் அதிகரிப்பு முக்கிய முன்னறிவிப்பு என்றும், விமானப்படை தாக்குதல்கள் போன்று நடைபெறும் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி, “இஸ்ரேலை முழுவதும் அழிக்காமல் விட போவதில்லை” என்று கூறி வருகிறார்.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram