கொஞ்சம் பொறுப்போடு விளையாடுங்க ராகுல்!! இங்கிலாந்து போட்டி குறித்து முன்னாள் வீரர் அறிவுறுத்தல்!!

Play with some responsibility, Rahul.

கிரிக்கெட் : இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது இந்த போட்டி குறித்து முன்னாள் வீரர் டபுள்யூ. வி ராமன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 5 டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சமீபத்தில் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்து போட்டியாக புதிய கேப்டன் கில்லுடன் இங்கிலாந்துடன் களமிறங்குகிறது இந்திய அணி.

நிலையில் அணியில் அதிக அனுபவம் கொண்ட வீரராக கே எல் ராகுல் திகழ்கிறார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக தொடக்க வீரராக களம் இறங்கிய கேஎல் ராகுல் முதல் இன்னிங்ஸில் சதம் விலாசினார். இரண்டாவது போட்டியில் அரை சதம் அடித்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர் எந்த வரிசையில் களமிறங்க போகிறார் என்பது ரசிகர்களுடைய பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

இதுகுறித்து டபிள்யூ வி ராமன் கூறுகையில், கே எல் ராகுல் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர் அது மட்டுமல்லாமல் எந்த வரிசையில் களமிறக்கினாலும் சிறப்பாக ரன் குவிக்கும் ஒரு வீரர். ஆனால் அனுபவம் வாய்ந்த வீரர்கள் விளையாடாமல் புதிய வீரர்களைக் கொண்டு இங்கிலாந்து அணியை 5 போட்டிகளில் எதிர்கொள்ள நிலையில் கே எல் ராகுல் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும். அவரின் ஆட்டம் அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram