Cricket: நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் வருவதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மெகா இடத்தில் அதிக தொலைத்து வாங்கப்பட்ட முதல் மூன்று வீரர்கள் ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு லக்னோ அணியும், ஸ்ரேயர்ஸ் ஐயர் ரூ. 25.75 கோடிக்கு பஞ்சாப் அணியும், வெங்கடேஷ் ஐயர் ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணியும் வாங்கியிருந்தது. அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அந்த முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தையே அளித்தனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு ரிஷப் பண்ட் அதிக தொகைக்கு வாங்கப்பட்டார் அவர் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். முதல் போட்டியில் 6 பந்துகளை எதிர் கொண்டு ஒரு ரன் கூட அடிக்க முடியாமல் டக் அவுட் ஆனார். மூன்றாவதாக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் இதுவரை இரண்டு போட்டியில் விளையாடி 9 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
இதில் இரண்டாவதாக அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயர்ஸ் ஐயர் மட்டும் இதுவரை விளையாடிய இரண்டு போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் போட்டியில் 97 ரன்களும் இரண்டாவது போட்டியில் 50 ரன்கள் அடித்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர்.