cricket: ஐபிஎல் போட்டிகளில் இதுவரை அதிக முறை ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியல்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியானது மார்ச் 22 அதாவது நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் தொடரை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் முதல் போட்டியாக பெங்களூரு மற்றும் கொல்கத்தா இரு அணிகளும் மோத உள்ளது.
ஐபிஎல் போட்டியை பொருத்தவரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் தங்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர்கள் இன்டர்நேஷனல் அணியில் இடம்பெற உந்துதலாக இருக்கும் ஒரு மிக முக்கியமான போட்டியாகும். அதனால் அதிகப்படியான வெளிநாட்டு வீரர்களும் இதில் கலந்து கொள்வதுண்டு.
ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச ரன் அடித்த வீரர்கள் மற்றும் பௌண்டரி சிக்ஸ் அடித்த பட்டியலில் நாம் பார்க்கும் அதிரடி வீரர்கள் தான் அதிகப்படியான டார்க் அவுட் ஆன வீரர்கள் பட்டியலிலும் இடம் பிரிக்கின்றனர் இது நமக்கு நம்ப முடியாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் இதுவரை அதிகமாக டக்கோட்டான வீரர்களில் முதலிடத்தில் கிளன் மேக்ஸ்வெல் 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார். தினேஷ் கார்த்திக் அவரும் 18 முறை டக் அவுட் ஆகி உள்ளார். மூன்றாவது இடத்தில் அதிரடி வீரர் ரோஹித் சர்மா தான் இருக்கிறார் இவர் 17 முறை தக் அவுட் ஆகி உள்ளார். இதில் முதல் மூன்று இடத்தில் இடம் பிடித்துள்ள வீரர்களும் அதிரடியாக விளையாடும் வீரர்கள்.