தமிழக மாணவர்களுக்கு பிளஸ் டூ பொது தேர்வு மார்ச் 3 இன்று முதல் ஆரம்பித்துள்ளது. மார்ச் 25 வரை இந்த தேர்வு நடக்கப்படுகிறது. புதுச்சேரியில் இன்று தொடங்கி மார்ச் 27 வரை தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமாக 3316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், ஏற்கனவே தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் சிறை கைதிகள் என்று மொத்தமாக எட்டு லட்சத்து 21,000 மாணவர்கள் தேர்வு எழுத தயாராக உள்ளனர்.
இதற்காக பிரத்யேகமாக 43,446 தேர்வு கண்காணிப்பாளரான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினரும் கிட்டத்தட்ட 4500 பேர் களம் இறக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு தேர்வு எழுத தடை விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பல அரசியல் தலைவர்களும் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தவெக தலைவர் விஜய், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதும் தம்பி, தங்கைகளுக்கு வாழ்த்துக்கள். இந்த பொதுத் தேர்வில் வெற்றி பெற்று வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன், இன்று முதல் தொடங்கும் பொதுத்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். திடநம்பிக்கையோடும், பெரும் மகிழ்வோடும் தேர்வை எதிர்கொள்ளுங்கள் என்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலையும் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் என்று பகிர்ந்துள்ளார். அமைச்சர் அன்பில் மகேஷ், நாகையில் மாணவர்களை சர்ப்ரைஸாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பதிவிட்டு தேர்வு எழுத அனுப்பி வைத்துள்ளார். மாணவர்கள் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தயாராக இருக்கும் இந்த பொது தேர்வை ரிலாசாக, பாசிட்டிவாக எழுதி வர மனமார வாழ்த்துக்கள் என்று பலதரப்பட்ட மக்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.