அமெரிக்கா போன்ற வளர்ச்சி மிகுந்த நாடுகளில் ஆராய்ச்சி மூலம் நல்ல பரிவர்த்தனைகளையும், அதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தையும், உலகமே பேசும் மதிப்பையும் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அங்கு உள்ள ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள். இந்தியாவிலும் ககன்யான் ஆராய்ச்சி கூடம் இந்தியாவின் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு முக்கிய பெரும்புள்ளியாக அமையும். இதற்கான ஆரம்பகட்ட பணிகள் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவின் ஆராய்ச்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய அரசு தனியார் நிறுவனங்கள் ஆராய்ச்சி மையத்தில் தொண்டு ஆற்ற வேண்டும் என்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
தனியா நிறுவனங்கள் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தினால் ஆராய்ச்சி போன்ற நவீன விஞ்ஞானத்தில் கால் பதிக்க முடியாமல் இருக்கின்றனர். இவர்களை ஊக்குவித்து அடுத்த கட்ட வளர்ச்சியை இந்தியாவை வழி நடத்திச் செல்ல ஏற்கனவே இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடுக்கான பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் ஒரு லட்சம் கோடி ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். பருவநிலை மாற்றம், எரிசக்தி கட்டுப்பாடு, ஏ ஐ டெக்னாலஜி போன்றவற்றில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவும். இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி இதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளார் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது 2047 ஆம் ஆண்டு வளர்ச்சி அடைந்த பாரத இந்தியா எந்த இலக்கிற்கு பெரும் துணையாக நிற்கும். மேலும் அந்தந்த துறைகளில் இந்தியாவின் அடுத்த கட்ட வளர்ச்சி மற்றும் சுய சார்பு நிலை ஆகியவை அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.