தமிழகத்தில் தேர்தல் அலை!!  மதுராந்தகத்தில் சங்கமிக்கும் NDA தலைவர்கள்!! 2026 தேர்தலுக்கான தொடக்கம்!!

PM Modi TN Visit Maduranthakam Rally NDA Alliance

சென்னை/மதுராந்தகம் (ஜனவரி 23, 2026): கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் மற்றும் பொறுப்பு டிஜிபி ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர்.

ஆளுநர் வரவேற்பு: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமரை மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மதுராந்தகம் நோக்கி மோடி: சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் செல்கிறார். அங்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான என்டிஏ கூட்டணியின் முதல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் என்டிஏ-வின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ்.

அன்புமணி ராமதாஸ்: பாமக தலைவர்.

டிடிவி தினகரன்: அமமுக பொதுச்செயலாளர்.

மற்ற தலைவர்கள்: ஜி.கே.வாசன் (தமாகா), ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட அனைத்துக் கூட்டணித் தலைவர்களும் ஒரே மேடையில் பிரதமருடன் தோன்ற உள்ளனர்.

கூட்டத்தின் முக்கியத்துவம்: “திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவோம்” என்ற முழக்கத்துடன், 2026 தேர்தலுக்கான பிரச்சாரத்தை இங்கிருந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 15,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram