16 மாகாண கவர்னர்களுடன் பிரதமர் மோடி!! கூட்டு ஒத்துழைப்புக்கு அழைப்பு!!

PM Modi with 16 provincial governors
டோக்கியோ: இந்திய அரசு மற்றும் ஜப்பான் மாகாணங்களுக்கு இடையே கூட்டு ஒத்துழைப்பு ஏற்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் ஆக இந்திய பிரதமர் மோடி ஜப்பான் சென்று உள்ளதை தொடர்ந்து டோக்கியோவில் இந்திய ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்றார்.
அப்போது உரையாற்றிய அவர் இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை செழிப்பான மற்றும் வளர்ச்சியை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார். நேற்று ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபா அவர்களை சந்தித்து உரையாற்றினார்.
பதினைந்தாவது வருடாந்திர உச்சி மாநாடு இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் இந்தியா ஜப்பான் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது தொடர்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று காலை தோக்கையாவில் 16 மாகாண கவர்னர்களுடன் சந்தித்து பேசினேன். இந்தியா ஜப்பான் நாட்டின் நட்பின் முக்கியத்துவம் மத்திய அரசு மற்றும் மாகாண அரசு ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.
நேற்று நடைபெற்ற 15 வது இந்திய மற்றும் ஜப்பான் உச்சி மாநாட்டில் தனி இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் வர்த்தகம் பல துறைகளில் ஒத்துழைப்பு, புதுமை மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. தொழில்நுட்பம், புதிய நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்கால துறைகளுக்கு பயன்படும் வகையில் இந்த இயக்கம் இருக்கும் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram