பாமக கட்சி சமீப காலமாக பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்பா மகன் இருவருக்குமான பிரச்சனையை அரசியலில் புகுத்தி ஆட்களை புதிதாக சேர்ப்பது விளக்குவது என்று விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சென்ற வாரம் ராமதாஸ் எம்எல்ஏ அருள் தான் இனி கட்சிப் பொறுப்புகளை பார்ப்பார் என்று கூறியிருந்தார். மேலும் கட்சி சார்ந்த முடிவு எடுக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. என்னோடு இருப்பவர்கள் தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் முக்கிய பதவியில் போட்டியிடுவார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் அதற்கு முன்னரே தலைவர் பதவியை விட்டு விலகிக் கொண்டு வேறு ஒரு கட்சி தொடங்கிக் கொள்ளுமாறு அன்புமணியை ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார்.
அன்புமணியோ, தொடர்ந்து கட்சி சார்ந்த முடிவுகள் கட்சி தனி கூட்டங்கள் என்று கட்சி களம் கொண்டிருந்தார். மேலும் பாமக மூத்த நிர்வாகி மற்றும் தந்தையாகிய ராமதாசுக்கும் இவருக்குமான பிரச்சனைக்கு காரணம் திமுக தான் என்று குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ராமதாஸுக்கு எதிராகவே செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சென்ற வாரம் கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்கப் போவதாக எம்எல்ஏ அருளை ராமதாஸ் நியமனம் செய்த நிலையில், தற்சமயம் அன்புமணி அவரை பதவி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். இது மேலும் அவர்களுக்கு இடையேயான போட்டியையும், இடையே மாட்டி தவிக்கும் கட்சி உறுப்பினர்களையும் உறுதிப்படுத்துகிறது.