பாமக கட்சியில் நிறுவனர் ராமதாசுக்கும், அதன் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் ( ராமதாஸின் மகன் ) இடையே பல சர்ச்சைகள் எழுந்து வந்து வருகின்றது. இந்நிலையில் ராமதாஸ், அன்புமணியை வேறு கட்சி தொடங்கிக் கொள்ளுமாறு வலியுறுத்தி இருந்தார். ஆனால் அவர், தனியே கட்சி மீட்டிங் வைத்து வருகிறார். மேலும் திமுக அரசின் குறைகள் குறித்தும் பாமக கட்சி சார்பாக அவ்வப்போது கேள்வி எழுப்பி வருகிறார். இவர் மாவட்ட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த போது பலர் தந்தையும் மகனும் இடையே சண்டையில் நம்மை போட்டு புரட்டுகிறார்கள் என்றபடி என்ன செய்வது என்று அறியாது செயல்பட்டு வந்தனர்.
மேலும் கட்சித் தொண்டர்கள் ராமதாஸின் புதிய நபர்கள் சேர்க்கை குறித்தும் அவர்கள் பாமக கட்சிக்கு ஏற்கனவே துரோகம் செய்து வந்தவர்கள் என்று ஒருபுறம் பிதற்றி வந்து இருந்தனர். இந்நிலையில் தற்சமயம் ராமதாஸ் இணை பொதுச் செயலாளராக இன்று ஒருவரை அறிவித்துள்ளார். அவர்தான் சேலம் மாவட்டத்தில் பாமக கட்சி சார்பில் பல்வேறு பதவி வகித்து வந்த அருள் ராமதாஸ். இவரது பதவி குறித்து கூறும் போது ராமதாஸ், இவர் என்னுடன் தான் எப்பொழுதும் இருப்பார். மேலும் இவருக்கு இமயமலை அளவு உயரத்திற்கு பொறுப்பு வழங்கப் போகிறோம் என்று மறைமுகமாக அன்புமணியை சுட்டிக்காட்டி உள்ளார். மேலும் இவர் எனக்கு கடைசி வரை நான் கூறும் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார். எனது நம்பிக்கைக்கு உரியவர் என்று சேலம் மாவட்ட எம்எல்ஏ அருள் ராமதாசை பற்றி கூறியுள்ளார்.





