என்னுடன் இருப்பவர்களை ஆட்சியில் இடம்பிடிப்பர்!! மறைமுகத் தாக்குதல் நடத்திய ராமதாஸ்!!

பாமக கட்சி நிறுவனர் ராமதாஸ் காலையில் கட்சி முக்கிய உறுப்பினர்களை அறிமுகம் செய்து மேலும் அவர்களை பற்றியும் அவரது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்து இருந்தார். அதில் அவர் கூறியது பின்வருமாறு, சேலம் மாவட்ட எம்எல்ஏ அருள் ராமதாஸ் அவர்களை இணைச் செயலாளராக அறிவித்திருந்தார். அவரோடு சில கட்சி உறுப்பினர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் காணப்பட்டனர். பேராசிரியர் தீரன் மற்றும் வன்னியர் சங்கத்துடைய மாநில தலைவராக அருள் ராமதாசை அறிவித்துள்ளார்.

அறிவித்துவிட்டு உடனே, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இவரை வளை விரித்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு இமயமலை அளவிற்கு பொறுப்பு கொடுக்கிறோம் எங்கள் கட்சிக்கு வாங்கோ என்று கூப்பிட்டதாக கூறியுள்ளார். ஆனால் அருள்மொழி அதை மறுத்துவிட்டு மீண்டும் இங்கேயே வந்து விட்டார். தியாகச் செம்மல் வி கே மணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் அடைந்தவுடன் என்னோடு சேர்ந்து கட்சி பணிகளை தொடருவார் என்றுள்ளார். என் கூட இப்போது இருக்கும் மாவட்ட செயலாளர்கள் மாநிலச் செயலாளர்கள் மட்டும்தான் வரும் தேர்தலில் போட்டியிடுவார்கள். இந்த கட்சி குறித்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு என் ஒருவருக்கே அதிகாரம் உண்டு என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவருடன் தற்போது உறுதுணையாக நிற்பவர்களே வரும் தேர்தலில் முக்கிய பதவி வகிப்பார்கள் என்றும், மறைமுகமாக அன்புமணியையும், அவர் துணை நிற்பவர்களையும் தாக்கியுள்ளார். ஆனால் இவர் கூட்டணி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடவில்லை.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram