மீண்டும் விமான பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தோட்டா!! தீவிரப்படுத்தப்பட்டுள்ள பயணியர் சோதனை!!

சமீபத்தில் நடந்த அகமதாபாத் விமான விபத்து ஒட்டு மொத்த உலக மக்களை நிலை குலைய செய்து இருந்தது. அதன் பிறகு தாய்லாந்தில் இருந்து கிளம்பிய விமானம் போலி மிரட்டல் காரணமாக அவசரமாக தரையிறங்கப்பட்டு இருந்தது. நேற்று யாத்திரை பயண ஹெலிகாப்டர் ஒன்று வெடித்து சிதறி இருந்தது.  அதனைத் தொடர்ந்து தற்சமயம் இரண்டாவது முறையாக கோவை விமான நிலையத்தில் பயணியர்களிடம் இருந்து தோட்டா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது இரண்டாவது முறை என்பதால் போலீசார் விமான நிலையத்தில் பயணியர் சோதனைகளை தீவிரப் படுத்தி உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவரிடம் இருந்து தோட்டா பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் கோவை விமான நிலையத்தில் மற்றொரு நபரிடம் இருந்து தோட்டா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எர்ணாகுளத்தை சேர்ந்த நபர் சிபு மேத்யூ. இவர் நேற்று அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்தார். அவரைப் பரிசோதித்த விமான காவலர்கள் அவரின் ஷூவிலிருந்து தோட்டாவை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. பயணிகளிடம் இருந்து தோட்டக்கர் பறிமுதல் செய்யப்படுவது தொடர்ந்து நடத்தப்படுவதால் கூடுதல் தீவிர சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றனர் விமான நிலைய காவலர்கள். சமீபத்தில் ஏற்பட்ட விமான விபத்து குறித்து மக்கள் அஞ்சி வரும் நிலையில் இது மேலும் மக்களை பதற வைக்க வாய்ப்பு உள்ளது என்பதால் விரைந்து போலீஸார்கள் செயல்படுகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram