சென்ற ஆண்டு வரை வரிவிதிப்பானது குடியிருப்பு, தொழிற்சாலை, வணிகம், அலுவலகப் பயன்பாடு, மற்றும் ஸ்டார் ஹோட்டல் போன்ற மென்பொருள்களின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு இருந்தது. நடப்பாண்டு இது குடியிருப்பு, வணிகம் மற்றும் தொழிற்சாலை ஆகிய மூன்று பிரிவுகள் மட்டுமே உள்ளது. குடியிருப்பு தொழிற்சாலைகள் ஆகியவை இல்லாத அனைத்தும் வணிகத்தில் சாறும் என்ற பட்சத்தில் கட்சி அலுவலகங்களும் வணிகத்தின் கீழ் அதிக வரி கட்டும்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அதிக வரி திணிப்பு குறித்து எந்த ஒரு கட்சி நிர்வாகிகளும் கேட்க முன் வராத பட்சத்தில் தற்சமயம் அவர்களே இதில் சிக்கிக் கொண்டு தள்ளாடுகின்றனர்.
இதன் ஒரு சாராம்சமாக தான் கோவையில் உள்ள திமுக மற்றும் மதிமுக கட்சி அலுவலகங்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31 க்குள் இவ்வரியை கட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடைசியாக திமுக கட்சியினர் கட்சி அலுவலகத்திற்காக அரையாண்டு 2000 ரூபாய் வரி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் வணிகத்திற்கு கீழ் மாற்றப்பட்ட தற்சமய வரியானது, ஒரு லட்சத்து நான்காயிரம் ரூபாய் என்று அதிர்ச்சிகர தகவலை வெளிப்படுத்தி உள்ளனர். இதனை குறைக்குமாறும் மேல்முறையீட்டு உள்ளனர். சித்தாபுதூர் மதிமுக அலுவலகத்துக்கு 16,437 வரி விதித்துள்ளது.
எம்எல்எப் அலுவலகம் இதுவரை ரூபாய் 846 வரி செலுத்தி இருந்தது. தற்சமயம் 64 ஆயிரம் ரூபாய் செலுத்த நிர்ணயித்துள்ளது. மா. கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு அரையாண்டிற்கு ₹.44,430 வரி செலுத்த நிர்ணயத்துள்ளது. இந்த வளாகங்கள் எல்லாம் வணிக பயன்பாடு இல்லை. எனவே இதனை அலுவலக பயன்பாடு ஆக மாற்றி தர கோரி உள்ளது கட்சி அலுவலகங்கள். இதனைக் கண்ட மக்கள் எங்களுக்கு வரி விதிக்கும் போது எங்கே போனீர்கள்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.