மியான்மரில் ரமலான் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தால் பூமிக்குள் புதைந்து உயிரிழந்திருப்பது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மியான்மரில் கடந்த மார்ச் 28ஆம் தேதி அன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பெரிய பெரிய கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கி இடிந்து விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உலகையே உரையச் செய்தது. நாட்டில் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன அளவுகோலின் படி முதல் நிலநடுக்கம் 7.7 ஆகவும் இரண்டாவது நிலநடுக்கம் 6.4 ஆகவும் பதிவாகி இருந்தது.
இந்த பேரிடரா மியான்மரின் ஏராளமான வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மேலும் நகரின் விமான நிலையம் போன்ற பெற ஒரு கட்டமைப்புகளும் சேதம் அடைந்தன. நிலநடுக்கத்தின் போது மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 இஸ்லாமியர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன ரமலான் மாதத்தை முன்னிட்டு இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று தொழுகையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் அனைவரும் இதற்கு உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தால் மியான்மரில் உள்ள 60 மசூதிகள் செய்தமடைந்ததாகவும் அவற்றில் பெரும்பாலானவை மியான்மரின் முஸ்லிம் கமிட்டியை சேர்ந்த டொம்கி என்பவர் கூறி இருக்கிறார் இந்த மசூதி கட்டிடங்களில் பல பழமையானவை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் மேலும் இந்த 700 உயிரிழப்புகளும் அதிகாரப்பூர்வ உயிரிழப்புகளை சேர்க்கப்பட்டுள்ளனவா இல்லையா என்பது இன்னும் தெரியவில்லை என்றும் கூறினார்.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் குழந்தைகள் பெரியவர்கள் என சுமார் 1200 பேருக்கு மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன இந்த நிலநடுக்கத்தால் 3400 பேர் காயமடைந்திருக்கிறார்கள் மேலும் 300-க்கும் மேற்பட்டோர் நிலை குறித்து ஏதும் தெரியாததால் அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது இதனால் இந்த பலிய எண்ணிக்கை இன்னமும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.