சமீபத்தில் திண்டுக்கல்லில் உலக மகளிர் தின விழா, கட்சிக்கொடி வெள்ளி விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை இணைந்து முப்பெரும் விழா தேமுதிக சார்பில் நடைபெற்று இருந்தது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கி இருந்தார். அவர் அந்த கூட்டத்தில் தலைவர் மற்றும் அவரது கணவரான விஜயகாந்த் குறித்து பல நிகழ்வுகளை நினைவூட்டி உள்ளார். தேமுதிக கூட்டம் சார்பாக பலமுறை திண்டுக்கல் வந்துள்ளேன். எப்பொழுது இங்கு நாங்கள் வந்தாலும், மக்கள் வெள்ளத்தில் தான் சென்றுள்ளோம். திண்டுக்கல் கேப்டனின் கோட்டை.
தலைவர் விஜயகாந்த் நம்மை விட்டு எங்கும் செல்லவில்லை. நம்முடன் தான் இருக்கிறார். விஜயகாந்த் இறந்தபோது கருடன் வட்டமிட்டது. இன்று வரை அவரது சமாதியில் கருடன் வட்டமிட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
திண்டுக்கல் என்றாலே பூட்டும், பிரியாணியும் தான் உலகம் முழுவதும் ஃபேமஸ். மேலும் தேமுதிக கொடியின் சிவப்பு நிறம் ஜாதி மதமற்ற நமது ரத்தத்தின் கலர், மஞ்சள் ஏழைகள் அற்ற தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என்று குறிப்பதாகவும், கருப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களை களை அறுப்பதற்கான நிறம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவர் எப்பொழுதும் சொல்லை மீறி நடந்தது கிடையாது. என் தாய்மொழி தமிழ் அதை தவிர்த்து வேறு மொழிகளில் நடிக்க மாட்டேன் என்று உறுதியான நின்று இருந்தவர். இவரை தவிர்த்து திரை உலகில் உள்ள வேறு யாரும் அவர் போல் இருக்க முடியாது என்று எடுத்துரைத்துள்ளார். கோக், நகைக்கடை விளம்பரங்களில் எவ்வளவு ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக நின்று இருந்தார்.
நான் சொல்லி என் மக்கள் அதை தலைவரே சொல்லிவிட்டார். நல்லது! என்று பழக்கப்படுத்திக் கொள்வார்கள் என்று முன் எச்சரிக்கையாக இருந்தவர். ஆனால் ஒரு சிலர் மக்களின் நலன் கருதாமல் அரசியல் மேடைப் பேச்சில் ஈடுபடுகின்றனர் என்று மறைமுகமாக தாக்கியுள்ளார். நாம் ஆளும் கட்சி கிடையாது. ஆண்டதும் கிடையாது. ஆனால் திண்டுக்கல் முழுவதும் நம்முடைய கொடி தான். தலைவர் பெண்களுக்காக எவ்வளவோ விஷயங்கள் செய்துள்ளார். நாம் அவரை தவற விட்டு விட்டோம் என்று மேடையிலேயே பிரேமலதா, விஜயகாந்த் குறித்து பேசி உருகி உள்ளார்.