சென்னை: காஞ்சிபுரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பண்பாடுடன் நட்பு ரீதியாக சந்திக்க சென்றேன்.
விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத போதும் முதலமைச்சரின் மு க ஸ்டாலின் நேரில் வந்து வருத்தம் தெரிவித்து பேசியுள்ளார். விஜயகாந்த் மறைவின் போது இறுதி மரியாதை அனைத்து அரசு சார்பில் செய்யப்பட்டது. இந்த நட்பானது இன்று, நேற்று என்று அல்ல.
எங்களது திருமணம் மறைந்த கலைஞர் அவர்களின் தலைமையில் நடந்தது. எங்களது இரண்டு குடும்பங்களும் இவர்களாக தான் பழகி வருகிறார்கள். கலைஞரும், கேப்டனும் சுமார் 45 கால ஆண்டுக்கான நட்பு.
கலைஞரின் மறைவின் போது கேப்டன் அமெரிக்காவில் இருந்தார் அதனால் தான் நேரில் வர முடியவில்லை இருப்பினும் அமெரிக்காவிலிருந்தபடியே அஞ்சலி செலுத்தினார். குடும்ப நண்பர்கள் என்ற வகையில் நாங்கள் முதலமைச்சரை சந்தித்து பேசினோம்.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்தார் முதலமைச்சர். அதற்கு நாங்கள் நன்றி கூறி பதிவிட்டு இருந்தோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாகரிகம் கருதியை இந்த சந்திப்பு அமைந்தது மற்றபடி கூட்டணி குறித்து பேச்சுக்கு இடமே இல்லை.
எல்லோரும் மனிதர்கள் தான். வெவ்வேறு பற்றிய சந்தித்தாலே உடனே கூட்டணி குறித்து தான் என்று வதந்திகள் கிளம்பி விடுகிறது. ஏழு, எட்டு மாதங்கள் தான் இருக்கிறது தேர்தலுக்கு. எங்களது தேமுதிக கட்சியை பலப்படுத்தி வருகிறோம் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.