வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராக 2வது முறை பதவியேற்றவர் டொனால்ட் டிரம்ப். அதிபராக பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உலக நாடுகளை பதற்றத்தில் வைத்துள்ளார் டிரம்ப். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் மற்றும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குனராக இருப்பவர் எலான் மஸ்க். அமெரிக்க அதிபர் அரசு நிர்வாகத்தில் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக டாஜ் துறையின் தலைமை ஆலோசகராக ஹெலன் மாஸ்கை நியமித்தார்.
அவரின் ஆலோசனையின் படி ஆட்குறைப்பு மற்றும் நிதி திட்டங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் அதிபர் டிரம்புக்கும் , எலான் மஸ்க்கும் எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்து அதிபர் கொண்டு வந்த “பிக் பியூட்டிஃபுல் பில்” என்ற சட்ட மசோதா செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் பொருளாதார செலவினங்களை மாற்றியமைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது என்று அதிபர் தரப்பில் கூறப்பட்டது. இதில்
2017 இல் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் நீட்டிப்பு, வரி சலுகைகள் அளிப்பது போன்றது முக்கிய இடங்களை பிடித்துள்ளது. முக்கியமாக, குடியேற்ற தொடர்பான நடைமுறைகளை கடுமையாக்குவதும், மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கான வரி சலுகைகளை ரத்து செய்யவும் போன்ற சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளது. இது போன்ற காரணங்களால் எலன் மாஸ்க் கடும் கோபமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
அமெரிக்க அதிபர் கொண்டு வந்த இந்த மசோதா அருவருப்பானது என்று குற்றம் சாட்டியிருந்தார் எலான் மஸ்க். இதன்பிறகு அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் எலான் மஸ்க்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்று வந்தது. மேலும் நானில்லை என்றால் அவரால் வெற்றி பெற்று இருக்க முடியாது என்று கூறியிருந்தார். மேலும், அமெரிக்க அதிபர் நன்றி உணர்வற்றவர் என்று விமர்சித்து இருந்தார். இந்த மோதலானது தற்போது வெடித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், மேலும் துணை அதிபர் ஜேடி வான்சை அதிபர் பொறுப்பில் நியமிக்க வேண்டும் எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.





