விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்று வந்த கோவில் கும்பாபிஷேக பணிக்காக வந்த நான்கு அர்ச்சகர்கள் மது அருந்திவிட்டு ஆபாச அரைகுறை ஆடையில் நடனமாடிய வீடியோ ஒன்று வெளியானது. இவரு இவர்கள் நடனமாடும் வீடியோவை அந்த கோவிலில் முன்னாள் அர்ச்சகர் ஹரிகரன் மகன் சபரிநாதன் என்பவர்தான் வீடியோவாக பதிவு செய்தார்.
பதிவு செய்து அதனை இணையதளத்தில் வெளியிட்டார் அது மட்டுமல்லாமல் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகளுக்கு அதனை அனுப்பி வைத்து புகார் அளித்திருந்தார். அந்த இணையத்தில் வெளியான வீடியோவில் அவர்கள் ஆபாசமாக நடனம் ஆடுவது மட்டுமின்றி கோயில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது முகத்தில் விபூதியை வீசி அடித்து விபரீதமாக விளையாடி உள்ளனர் மற்றும் இதுபோன்று ஆபாச செய்தி ஈடுபட்டுள்ளனர்.
இதன் பேரில் விசாரணை செய்து அதில் ஈடுபட்ட கோமதி விநாயகம் உள்ளிட்ட நான்கு பேர் கோயில் விவகாரத்தில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளனர் மேலும் கோவில் பூஜையில் மற்றும் அது சம்பந்தப்பட்ட எந்த விவகாரங்களிலும் அவர்கள் தலையிட கூடாது எனவும் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த பிறகு இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் துறை ரீதியிலும் விசாரணை நடத்தி அதற்கான தண்டனை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.