தாய்லாந்தின் ஒரு நாள் பிரதமராக மூத்த அரசியல்வாதி சூர்யா ஜங்ருங் ரியாங்கிட் பதவியேற்க உள்ளார். தாய்லாந்து மற்றும் அண்டை நாடான கம்போடியாவிற்கு இடையே நீண்ட காலமாக பணி போர் நடைபெற்று வந்த நிலையில் தாய்லாந்து பிரதமராக இருந்த 38 வயதாகும் பேடோங்டார்ன் ஷினவத்ரா பதவி வகிக்கிறார்.
கம்போடியா முன்னாள் பிரதமர் ஹன்சன் ஐ ஷினவத்ரா தொலைபேசியில் தொடர்பு கொண்டு எல்லை பதற்றத்தை தணிக்குமாறு அவரை மாமா என்று அன்போடு அழைத்து பேசியது தாய்லாந்து நாட்டின் ராணுவ அதிகாரிகள் விமர்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ராணுவ வீரர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. சொந்த நாட்டு பிரதமர் நாட்டு ராணுவத்தை கம்போடியா விடும் அடகு வைத்ததாக பொதுமக்கள் கடுமையாக விமர்சித்தனர். கடந்த மே மாதம் தான் இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் மோதலில் ஏற்பட்டு போர் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் தாய்லாந்தின் பிரதமரின் நடவடிக்கை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஷினவத்ரா மீது தாய்லாந்து அரசியல் அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளது. அமைச்சரவை தார்மீக நெறிமுறைகளை மீறியதாக நீதிபதி கூறியது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாள் இடைவெளி இருக்கும் நிலையில் தற்காலிக பிரதமராக மூட்டு அரசியல்வாதி சூர்யா ஜங்ருங் ரியாங்கிட் பதவியேற்றார். இவர் தாய்லாந்தின் அமைச்சரவையில் துணை பிரதமர் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியவர்.
தாய்லாந்து பிரதமராக பதவியேற்ற ரியாங்கிட் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் ஷினவத்ரா கிடப்பில் போட்டிருந்த பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க உள்ளார். நாளை அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட உள்ள நிலையில் புதிய பிரதமராக வேறொருவர் நாளை தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்புகள் உள்ளது.