டோக்கியோ: இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா, ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றினார் பிரதமர் மோடி. அப்போது உரையாற்றிய அவர் நூற்றாண்டை நிலைத்தன்மை, செழிப்பானதாக உருவாகும் என்றும், வளர்ச்சி குறித்தும் உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து இந்திய ஜப்பான் இடையில் ஆன 15 வது வருடாந்திர உச்சி மாநாட்டின் பங்கேற்றார். ஜப்பானின் பிரதமர் கேரு இஷிபா சந்தித்து உரையாற்றினார். அப்போது ஜப்பான் மற்றும் இந்தியா, ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.
பிரதமர் சந்திப்பை தொடர்ந்து ஜப்பானில் உள்ள 16 மாகாணங்களின் கவர்னர்களை சந்தித்து பேசினார். இந்திய அரசு மற்றும் ஜப்பான் வாகனங்களுக்கு இடையான கூட்டு ஒத்துழைப்பு பற்றி பேசியுள்ளார். இவற்றை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி. இந்நிலையில் ஜப்பானின் சுற்றுப்பயணம் நிறைவடைந்தது. சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து விமானம் மூலம் சீனா புறப்பட்டு சென்றார்.
சீனாவின் தியான்ஜின் நகரில் நாளை மற்றும் ஒன்றாம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஒத்துழைப்பு மாநாட்டை தொடர்ந்து ரஷ்யா அதிபரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.