பிரதமர் மோடியின் 3.0 நிறைவு!! சாதனைகள் மற்றும் சவால்கள் என்னென்ன? 

Prime Minister Modi's 3.0 completion!!

கடந்த வருடம் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி மூன்றாவது பிரதமராக குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார். அதன்படி பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 11 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. 11 ஆண்டுகளில் ரஷ்யா உக்கிரன் போர், இஸ்ரேல் ஹமாஸ் என்ற உலகப் போர்களை சந்தித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் உடனான மோதல் மற்றும் அமெரிக்க அது அதிபர் ட்ரம்பு தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்தது போன்ற சவால்களை சந்தித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் மே 7ஆம் தேதி பாகிஸ்தானில் பெரும் பயங்கரவாதி தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தியா பாகிஸ்தான் போரில் சீனாவிடம் இருந்து வாங்கிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்தியது ஆனால் இந்தியா ராணுவம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு பதில் கொடுத்தது.

இந்த தாக்குதலின் போது 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்தது. 2047-இல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தை அடைய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிரதமராக பதவியேற்ற ஒரு நாளுக்கும் பிஎம் கிசான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ்ரூ.20,000 கோடி சுமார் 93 பில்லியன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

நடுத்தர வகுப்பினருக்கு வருமான வரி விளக்கு அளித்தது. இந்தியாவில் தொழில் செய்வதை எளிதாக பல இடங்களில் எடுத்துள்ளது. மோடியின் 3.0 ஆட்சி குற்றவியல் நீதி அமைப்பு மிகப்பெரிய மாற்றம் கொண்டு வந்தது. பாரதிய நியாய சன்ஷிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சக்ஷயா அதினியம் போன்ற மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்தியது.

 இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றை மாற்றியமைத்தது. சக்கா விகாஸ் என்ற திட்டத்தின் மூலம் உட்க்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் பிரதமர். ஜூன் ஆறாம் தேதி திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரயில்வே மேம்பாலம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிரா மாவட்டத்தில் வதாவன் துறைமுகத்திற்கு அடிக்கல்லை நாட்டியுள்ளார் பிரதமர். பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது பிரதமராக பதவியேற்ற பின் இத்தாலி சென்று ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். மேலும், ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். ரஷ்ய பயணத்தின் போது அதிபர் விளாடிமிர்  புதினுடன் 22 வது இந்திய-ரஷ்யா மாநாட்டில் கலந்து கொண்டார். இதில் “செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்டல் ஆப் தி ஆர்டர்” விருதினை வழங்கினார்.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram