புதுடெல்லி: பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக செல்ல இருக்கிறார். டெல்லியில் இருந்து வரும் 23ஆம் தேதி பிரிட்டன் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அங்கு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
கையெழுத்தாகும் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரியை குறைக்க வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. பிரிட்டன் நாட்டின் விஸ்கி மற்றும் கார்கள் ஆகியவை விற்பனை செய்வதை எளிதாக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டன் சுற்றுப்பயணம் முடித்த பின் 25 ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது என எதிர்பார்க்கப்படுகிறது. மாலத்தீவில் அறுபதாவது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். குறிப்பாக இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான உறவில் தற்போது கசப்புணர்வு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாலத்தீவின் சுற்றுப்பயணம் ஆனது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தின் போது மாலத்தீவு அதிபர் முகமது முய்சு . உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் நிறைவடைந்து பின் இந்தியா திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.