இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக சிறப்பாக நடைபெற்று வந்த IPL போட்டி தொடர் திடீரென நிறுத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் இன்று தொடங்க இருந்த நிலையில் தற்போது சிக்கல் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த IPL போட்டி தொடர் யாரும் எதிர் பார்க்காத வகையில் ஏராளமான திருப்பங்களுடன் சிறப்பாக நடைபெற்று வந்தது. ஐ பி எல் தொடங்கிய ஆண்டு முதல் இன்று வரை பெங்களூரு அணி ஒரு கோப்பையை வெல்ல போராடி வருகிறது. இன்னும் ஒரு சில அணிகள் கோப்பை வெள்ளம் இருந்தாலும், பெங்களூரு அணியை அனைவரும் எதிர் பார்க்க காரணம் விராட் கோலி தான்.
அணைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஒரு முறையாவது பெங்களூரு அணி ஒரு முறையாவது கோப்பையை வென்றுவிடாத என்று எதிர் பார்த்து காத்திருந்த நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி வந்தது பெங்களூரு அணி. இதுவரை விளையாடிய போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. புல்லிபட்டியலில் இரண்டாவது இடத்தில உள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இடையிலான போர் முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் இன்று போட்டிகள் மீண்டும் தொடங்க உள்ள நிலையில் முதல் போட்டியாக பெங்களூரு மற்றும் கொல்கத்தா இடையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் 50% கும் மேல் மைதானத்தில் மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முதல் போட்டியே நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறும். பெங்களூரு அணி முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறும்.