சமீப காலங்களில் பலதரப்பட்ட நிறுவனங்கள் புரோட்டின் பவுடர்கள் தயாரிப்பில் இறங்கி வருகின்றன. இந்த ப்ரோட்டீன் பவுடர்களால் ஒரு நாளைக்கு நமக்கு தேவைப்படும் புரோட்டின் எடுத்துக்கொள்வது பற்றியும் ஆராய்ச்சி தகவல் நம்மை தெளிவு படுத்துகின்றன. ஆனால் இப்படி ப்ரோட்டீன் எடுத்துக் கொள்வது சரியான முறையா? என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். ஒரு கிலோவிற்கு 0.8 கிராம் முதல் ஒரு கிராம் அளவிலான ப்ரோட்டின் உடலுக்கு போதுமானது. இதை நாம் உணவு முறையிலேயே தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
நாம் சமநிலையான உணவு முறை உட்கொள்ளுவது மூலம் புரோட்டின் மட்டுமல்லாது நார்ச்சத்து, விட்டமின் & தேவையான மினரல்ஸ் ஆகியவையும் இதன் மூலம் கிடைக்கின்றன. உங்கள் உடம்பிற்கு புரோட்டின் தேவை அதிகமாக தேவைப்பட்டால், நம் அன்றாட வாழ்வில் பயிறு வகைகள், கொண்டைக்கடலை, பாலாடை, தயிர், கோழி, முட்டை ஆகியவற்றில் இருந்து தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் புரோட்டின் பவுடர் மூலம் எடுத்துக் கொள்ளும் போது அதில் முழுக்க முழுக்க புரோட்டீன் மட்டுமே கிடைக்கும். மேற்கூறப்பட்ட இந்த உணவு முறை மூலம் எடுத்துக் கொள்ளும் போது, இத்துடன் மற்ற சத்துக்களும் இணைந்து கிடைக்கும்.
மேலும் புரோட்டின் பவுடர் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அது குடல் செயலிழப்பதற்கும் காரணமாக அமையும். அதிகப்படியான நைட்ரஜனை வெளியேற்றுவதனால் இந்த செயலிழப்பு ஏற்படுகிறது. மேலும் சில புரோட்டின் பவுடர்களில் ஈயம் போன்ற கடின உலோகங்களின் கலவைகளும் கலந்து காணப்படுகின்றன. ஆகவே, முதலில் புரோட்டின் பவுடரை தேர்ந்தெடுப்பதில் நல்ல தெளிவு பெற்று இருக்க வேண்டும். புரோட்டின் பவுடர் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில், அதில் குறிப்பிட்டுள்ள இன்கிரிடியன்ஸ் மற்றும் லேபிள்ஸ் வேதியியல் குறியீடுகள் ஆகியவற்றை சரி பார்த்து ஒரு புரோட்டின் பவுடரை தேர்வு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. முடிந்த அளவு உணவு பழக்கம் மூலம் எடுத்துக் கொள்வது நல்லது என்று பலதரப்பட்ட டாக்டர்கள் அவர்களின் கருத்துக்களை எடுத்துரைக்கிறார்கள்.


