புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி என். ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆட்சி அமைத்து வருகிறார். கூட்டணி முதல் சில சர்ச்சைகள் கட்சிக்குள்ளயே நிலவி வந்துள்ளன. இந்நிலையில் கவர்னராக இருந்த சிபி இராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி கைலாஷ்நாதனை பொறுப்பில் அமர்த்திருந்தார். இவருக்கும் புதுச்சேரி கவர்னருக்கும் இடையே தொடர்ந்து நிர்வாகம் அடிப்படையில் மோதல் நடந்து கொண்டே வந்துள்ளது. ஒருவருக்கொருவர் முரணாக செயல்பட்டு வந்துள்ளனர். இதனை அடுத்து சுகாதாரத்துறை இயக்குனர் பதவிக்கு கடந்த சில மாதங்களாகவே ஆட்கள் நியமிக்கப்படவில்லை.
இதனால் துணை இயக்குனர் அனந்த லட்சுமியை அப்பதவிக்கு பரிந்துரை செய்துள்ளார் முதல்வர். அதனை அடுத்து நேற்று அப்பதவிக்காக அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேளை கவர்னர் நியமித்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர், சபாநாயகர் செல்வமிடம் இதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் என் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று கூறிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சபாநாயகர், அமைச்சர் நமச்சிவாயத்திடம் இதனை தெரிவித்துவிட்டு முதல்வர் வீட்டை நோக்கி விரைந்துள்ளார். அன்று நடைபெற்ற கவர்னர் விழாவிலும் முதல்வர் கலந்து கொள்ளவில்லை. நமச்சிவாயம் கவர்னரிடம் விஷயத்தை எடுத்துக் கூறிவிட்டு அவரும் முதல்வர் வீட்டை நோக்கி வந்துள்ளார். அதன் பிறகும் முதல்வர் மனம் மாறாத இருவரும் அதிருப்தியில் வீடு திரும்பி உள்ளனர். இதை அறிந்த செய்தியாளர்கள், செல்வம் மற்றும் நமச்சிவாயத்திடம் இது குறித்து கேட்டபோது அவர்கள், எங்கள் முதல்வரிடம் நாங்கள் ஏன் சமாதானம் பேச போகிறோம் என்று சமாளித்து சென்றுள்ளார்.