புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த கல்வியாண்டில் வெயிலின் தாக்கத்தால் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. மூன்று நாட்கள் விடுமுறை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளி இயக்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறையில் வெயிலின் தாக்கத்தால் முன்கூட்டியே ஏப்ரல் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனை ஈடு செய்யும் வகையில் வரும் ஆகஸ்ட் 2 தேதி, 30 ஆம் தேதி மற்றும் நவம்பர் 15ஆம் தேதி ஆகிய சனிக்கிழமைகளில் பள்ளி வழக்கம் போல் இயங்கும் என புதிய அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கியதால் பள்ளி வேலை நாட்கள் குறையும் என்பதால் சனிக்கிழமைகளில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 2 தேதி 30 ஆம் தேதி மற்றும் நவம்பர் மாதத்தில் 15ஆம் தேதி ஆகிய சனிக்கிழமை நாட்களில் பள்ளி வழக்கம் போல் செயல்படும் என புதிய அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.