கிரிக்கெட்: நேற்று இரவு நடைபெற்ற லக்னோ மற்றும் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 13வது போட்டியான லக்னோ மற்றும் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்திருந்தது. இதில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய மார்க்கரம் மற்றும் மார்ஷ் இவர்களில் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
இதில் அதிகபட்சமாக பூரன் 44 ரன்கள் பதோனி 41 ரன்களும் எடுத்தனர். பஞ்சாப் அணியின் ஹரிஷ்தீப் சிங் மூன்று விக்கெட்டுகளை லக்கி பர்குசன் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 16.2 ஓவர்களில் இலக்கை அடைந்து எளிதான வெற்றி அடைந்தது. தொடக்கவீராக களம் இறங்கிய பிர சிம்ரன் சிங் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயர்ஸ் ஐயர் 52 ரன்கள் நேஹல் வதேரா 43 ரன்கள் விளாசி 16.2 ஓவரில் ஆட்டத்தை முடித்து வைத்தனர். இதனால் பஞ்சாப் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.