ipl: நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணி அபார வெற்றி.
நடைபெற்று வரும் ipl தொடரில் அனைத்து போட்டிகளும் முடிவுற்ற நிலையில் தற்போது இறுதி போட்டியை நெருங்கிகொண்டிருகிறது. இந்நிலையில் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் பஞ்சாப் மற்றும் மும்பை இரு அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் செய்ய களமிறங்கியது. மும்பை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
மும்பை அணி முதலாவதாக களமிறங்கி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் தலா 44 ரன்கள் அடித்தனர். பஷீர் தீப் சிங் இரண்டு விக்கெட்டுகளும் ஜே மிசன், ஹோமர் சாய் தலா ஒரு விக்கெட்டுகளும் விழித்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 24 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ப்ரையன்ஸ் ஆர்யா மற்றும் பிறப் சிம்ரன் சிங் இருவரும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அடுத்தடுத்து களமிறங்கிய, இங்கிலீஷ் மற்றும் சுரேஷ் ஐயர் அதிரடியாக விளையாடினர். ஐயர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார் இதில் 8 சிக்ஸர்கள் 5 பவுண்டரிகள் அடங்கும்.
இதன் மூலம் பத்தொன்பதாவது ஓவரிலேயே 27 ரன்கள் அடித்து அபார வெற்றி பதிவு செய்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் அணி. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் தமிழ் சினிமாவில் வருவது போல் இவர் ஒரு ரவுடி ஐயர் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாளை மறுநாள் பெங்களூரு மற்றும் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையே இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.