கிரிக்கெட்: நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் லக்னோ இடையேயான போட்டிக்கு பின் ரிஷப் பண்ட் குறித்து கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று டெல்லி மற்றும் லக்னோ இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் கலம் இறங்கிய லக்னோனி 209 ரன்களை அடித்து பெரிய இலக்காக நிர்ணயித்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்களும், மிட்செல் மார்ஷ் 72 ரன்களும் எடுத்திருந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் தொடக்கத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் ஆட்டத்தின் இறுதி வரை சென்று கடைசி ஓவரில் வெற்றிக்கனியை சுவைத்தது டெல்லி அணி. இதில் அசுதோ சர்மா அதிரடியாக விளையாடி 66 ரன்கள் விலாசினார். இவர் இந்த போட்டியில் கடைசி 7 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிவு பெற்றபின் லக்னோ அணியின் உரிமையாளர் கொயங்கா மற்றும் ரிஷப்மென்ட் இடையிலான உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு போட்டியில் லக்னோனி தோல்வி தழுவிய பின் அப்போது கேப்டனாக இருந்த கே எல் ராகுலை மைதானத்தில் வைத்து திட்டியது பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தி இருந்தது. அதேபோன்று தற்போது ரிஷப் பண்ட்டுடன் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் சந்தானம் காமெடியில் வருவது போல் போன பொங்கலுக்கு நான் இந்த தீபாவளிக்கு நீயா என கே.எல். ராகுல் தப்பித்துவிட்டார் ஆனால் ரிஷப் பன்ட் மாட்டிக் கொண்டார் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.