டெல்லி பயங்கரவாத தாக்குதலால் உச்சகட்ட அளவில் பதற்றம் நிலவி வருகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார் என்ற தகவல் வெளியாகியது.
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுற்றுலா பயணிகளை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூற இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி அவர்கள். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 நபர்கள் கொல்லப்பட்டனர், மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இப்போது நடந்த தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமும் பாகிஸ்தான் மீது அளவு கடந்த கோபத்தில் உள்ளது.
இந்த தாக்குதலின் வெளிப்பாடாக பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது பாகிஸ்தானின் வாழ்வாதாரமான சிந்து நதிநீரை இந்திய தற்போது பாகிஸ்தானுக்கு திறப்பதை நிறுத்த உள்ளது.இதற்கு பதிலாக இந்தியாவுடன் யுத்தத்தை தணிக்க கூடிய சிம்லா ஒப்பந்தத்தை கைவிடுவதாக பாகிஸ்தான் அறிவித்திருக்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் போர் வெடிக்கும் என்ற சூழ்நிலை தற்சமயம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் ஜனாதிபதி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இன்று சந்தித்து நிலைமைகளை விளக்கி கூறுகின்றனர்.
இதை தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தையும் மத்திய அரசு நடத்தியுள்ளது இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை விரிவாக கூறப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் அமித்ஷா தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று உள்ளது. இந்த கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லோக் சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசுக்கு அனைத்து வகைகளிலும் உதவியாக இருப்போம் என்று கூறியுள்ளார்.