சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வருகிற 27ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கையின் படி அடுத்த ஏழு நாட்களுக்கு மழை அறிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
23 முதல் 27 ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்கள் காரைக்கால் மற்றும் புதுவை பகுதியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் பட்டையை கிளப்பும் நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் மழை அறிவித்துள்ளது.
நாளை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி வரை உயரக்கூடும். அளவு வேறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலை ஏற்படலாம். மேலும், தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை அறிவிப்பு உள்ளதால் அதிக ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி, வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் வரை காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 27-28 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (22.6.2025) சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் நிழலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக சென்னையில் 37-38 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.