நீலகிரி மாவட்டத்தின் மழை நிலவரம்!! 7 நாட்களுக்கு தொடரும்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

Nilgiris rain situation!! Continues for 7 days!!
சென்னை: மேற்கு வங்கப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில்  ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மேற்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்காள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் ஒரு காற்று இது தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 24ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஜார்கண்ட் வழியாக செல்ல வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
நேற்று குஜராத் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை மத்திய ராஜஸ்தான் பகுதிகளில் நகர இருக்கிறது. இன்று (18.06.2025) தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில், காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
நாளை (19.6.2025) தமிழகத்தில் ஒரு சில இடங்கள் காரைக்கால் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
20 முதல் 24 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்கள் புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மற்றும் மின்னல்கள் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram