சென்னை: இந்தியாவில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் ஏற்கனவே செப்டம்பர் மாதத்திற்கான மழை வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டது. இந்த மாதத்தில் மழை நிலவரம் குறித்து அறிவிப்பினை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கடந்த ஆண்டுகளில் பெய்த மழையை விட அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
சராசரி மலை 167.9 மில்லி மீட்டர் என்ற அளவிலிருந்து அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெரும்பாலான இந்திய பகுதிகளில் சராசரிக்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும் ஒரு சில பகுதிகளில் சராசரிக்கும் குறைவாக மழை பெய்யும். இந்தியாவின் வடகிழக்கு கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் சராசரியில் இருந்து அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பகல் நேரங்களில் மேற்கு வடமேற்கு மற்றும் தென்னிந்திய பகுதிகளில் சராசரியிலிருந்து குறைவான வெப்பநிலை நிலவும். மத்தியில் கிழக்கு பகுதி, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியா, மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் வடமேற்கு பகுதிகளில் சில இடங்கள் ஆகிய பகுதிகளில் சராசரியை விட அதிகமான வெப்பநிலை நிலவும். இரவு நேரங்களில் சராசரி மற்றும் சராசரிக்கு அதிகமான வெப்பநிலை நிலவும்.
தென்னிந்தியாவின் சராசரிக்கு கீழாக வெப்பநிலை நிலவ வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இன்று நள்ளிரவு வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் கனமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழை உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.