கிரிக்கெட்: நேற்று இரவு நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் சென்னை இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆறு எண்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்று இரண்டு போட்டி நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின இதில் டெல்லி அணி வெற்றி பெற்றது இரண்டாவது போட்டியாக சென்னை மற்றும் ராஜஸ்தான் இரு அணிகளும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த களம் இறங்கியது. தொடக்கவீராக களமிறங்கும் ஜெய்ஸ்வால் வழக்கம்போல் ஏமாற்றத்தை கொடுத்தார் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 20 ரன்கள் ஆட்டம் இழக்க அடுத்து களமிறங்கிய நித்திஷ் ரானா ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டார். கடந்த சில ஆண்டுகளாக சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்த நிதிஷ் ரானா இதற்கு முன் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் சரியான பேட்டிங்கை வெளிப்படுத்த வில்லை ஆனால் இந்த போட்டியில் 36 பந்துகளில் 81 ரன்கள் விளாசி அபார பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
இதனால் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் அணி. இரண்டாவதாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆக ருத்ராஜ் கடைசி வரை போராடினார். ஆனால் ராஜஸ்தான் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு காரணமாக இருந்தவர் நித்திஷ் ராணா. இந்த போட்டி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் நித்திஷ் ரானா.