ராமாயண படம் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி ராமர் சீதை வேடத்தில் நடிக்க, யாஸ் முக்கிய வேடத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தை நிதிஷ் திவாரி இயக்க, படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படம் இந்த வருட தீபாவளிக்கு முதல் பாகம் வெளியிடப்படும் என்று பட குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும், இந்த படம் குறித்த தகவல் அவ்வபோது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்து இருந்தன. சாய் பல்லவி இந்த படத்திற்கு நடிப்பதற்காக நான் வெஜ் சாப்பிடவில்லை போன்ற உறுதியில்லாத விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருந்தன. இதனை அடுத்து சாய் பல்லவி என்னை பற்றி உண்மையற்ற விஷயங்களை பரப்ப வேண்டாம் என்று வெளியிட்டு தெரிந்தார்.
நடிகை சாய் பல்லவி சுத்தமாக கிளாமர் சிறிதும் காட்டாத முன்னணி நடிகை நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்குபவர். இவருக்கென்று தனியாக ஃபேன்ஸ் பேஜஸ் நிறையாக உள்ளன. இவர் ஆரம்ப முதலே கடைசியாக நடித்த அமரன் திரைப்படம் வரை சிறிதும் கிளாமர் இல்லாமல் மிக நேர்த்தியாக நடித்துக் கொடுப்பவர். மேலும் ரன்பீர் கபூர் இணைந்து இதில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் போஸ்டர் ஏற்கனவே பிரமாண்டமாக ரிலீஸ் ஆகி இருந்தது. மேலும் பெரும் பரவலாக பரகிரப்பட்டு இருந்தது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்று ராமாயண பட குழு அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.