குழந்தை போல் மாறிய ராமதாஸ்!! காங்கிரஸ் மற்றும் விசிக மீது ஏன் திடீர் பாசம்? அன்புமணி சரமாரி கேள்வி? 

Ramdas turned into a child!!

சென்னை: பாமக சமூக ஊடகப்பிரிவு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அதில் வயது முதிர்வின் காரணமாக ராமதாஸ் குழந்தையாக மாறிவிட்டார் போலும் என்று பேசினார். மேலும் ஐந்து ஆண்டுகளாக பாமக நிறுவனர் ராமதாஸ் ராமதாஸ் ஆக இல்லை  என தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் நிலையிலிருந்து எது கூறி இருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு கேட்டிருப்பேன்.
 அப்போதே நான் முடிவெடுத்து விட்டேன் ராமதாஸுக்கு பிறகு தலைவராக வேண்டும் என்று பாமக தலைவராக இருக்குமாறு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ராமதாஸ் என்னிடம் கூறினார். 2024 இல் ராமதாஸ் கோரித்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன். அவர் அப்போதே சொல்லி இருந்தால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என ஏன் சொல்லப் போகிறேன்.
மேலும் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மீது பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஏன் திடீர் பாசம் என்று கேள்வி எழுப்பினார் அன்புமணி. ஐயா ஐயாவாக இருந்து என்னிடம் எது சொல்லியிருந்தாலும் கண்களை மூடிக்கொண்டு கேட்டிருப்பேன்.
இதுவரை ராமதாசை புகழ்ந்து பேசாத திருமாவளவன் தற்போது ஏன் பேசுகிறார். விசிகவின் வன்னியரசு, சிந்தனைச் செல்வன், மற்றும் ரவிக்குமார் ஆகியோருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மீது திடீரென பாசம் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் மூவரின் சுயநலத்திற்காக பாமக நிறுவனரை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வயது மூப்பு காரணமாக ராமதாஸ் குழந்தையாக மாறிவிட்டார் என்று விமர்சித்து பேசினார் அன்புமணி.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram