பாலியல் குற்றவாளி குறித்த தகவலுக்கு கொடுக்கப்பட்ட சன்மானம்!! அட்டகாசமான தீர்ப்பு!!

இரண்டரை வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டு இருந்தது. பாதிக்கப்பட்ட சிறுமி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கி வசித்து வந்த தம்பதியின் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஐந்து நபர் கொண்ட தனிப்படை போலீசார் இது குறித்து விசாரித்து வந்துள்ளனர். மேற்கொண்டு தகவலுக்காக, அப்பகுதியில் சம்பவம் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமராவில் தீபக் வர்மா என்ற நபர் அக்குழந்தையை கட்டாயப்படுத்தி தூக்கிக் கொண்டு செல்வதை கவனித்த போலீசார் அவர் மீது விசாரணை நடத்த அவரைக் காண சென்றுள்ளனர். போலீசாரை கண்ட தீபக் குற்றவாளி, போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான். அதனைத் தொடர்ந்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் அவன் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சில மணி நேரம் கழித்து குற்றவாளி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது அவருக்கு தகுந்த தண்டனை என்று பலரும் இந்த என்கவுண்டரை ஆதரிக்கின்றனர். இருப்பினும், முதலில் குற்றவாளி தான் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று.

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram