குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் விற்பனை முனையில் இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் முக்கியமாக AAY ,PHH போன்ற குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுடன் கைரேகை பதிவு செய்ய வேண்டும். இதுவரை இந்த பணியில் ரேஷன் கடையில் சென்று வந்த நிலையில் தற்போது குடும்ப அட்டைதாரர்கள் வீட்டிற்கு சென்று கைரேகை பதிவு செய்து வருகின்றனர். தற்போது வேலூர் மாவட்டத்தில் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்த நிலையில் தற்போது வீடுகளுக்கு சென்று கடை ஊழியர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கு பதிவு செய்து வருகின்றனர். மேலும், குடும்ப அட்டையில் எந்த உறுப்பினர் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த உறுப்பினர் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்து பொருட்களை பெற இயலும். மற்றவர்கள் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாது என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இடம் பதிவு செய்யும் பணி ஊழியர்கள் வீட்டிற்கு சென்று கைரேகை பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முறைகேடுகளை தடுப்பதற்காகவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்கள் வீட்டிற்கு சென்று கைரேகைகளை பதிவு செய்து வருகிறது. இப்பணி தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை வைத்திருக்கும் உறுப்பினர்களின் 86 சதவீதம் உறுப்பினர்கள் மட்டுமே கைரேகை அல்லது கருவிழி பதிவு மூலம் பதிவு செய்திருக்கிறார்கள். மீதம் உள்ள 14 சதவீதம் உறுப்பினர்கள் பதிவு செய்யாமலே இருக்கின்றன. மீதமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வருகிற 30-ஆம் தேதிக்கு ரேஷன் கடைகளை அணுகி கைரேகை அல்லது கருவிழி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அல்லது பி ஹெச் ஹெச் அட்டைதாரர்கள் வெளி மாவட்டங்களில் சென்று தங்கி வேலை பார்ப்பவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நடைமுறையின்படி மாற்றுத்திறனாளிகள் நோயாளிகள்,முதியவர்கள் மற்றும் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வீட்டிற்கு சென்று கைரேகை பதிவு அல்லது கருவிழி பதிவு செய்ய சிறப்பு திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடை ஊழியர்கள் அவர்களது வீடுகளுக்கே சென்று கைரேகை பதிவு மற்றும் கருவிழி பதிவு செய்து வருகின்றனர். பதிவு செய்யாமல் இருப்பவர்கள் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.