வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது திமுக அரசு. மகளிர் உரிமை தொகை திட்டம், மகளிர் பயண திட்டம் ஆகியவை அதன் வெற்றி சாதனை திட்டங்கள் ஆகும். தற்சமயம் அதைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை விரிவுபடுத்தும் திட்டத்தை வருகின்ற ஜூலை 15 முதல் தொடங்க உள்ளது. அதற்கு அடுத்து ஏற்கனவே அறிவித்தது போல் ரேஷன் கார்டுக்கான வீட்டு உபயோக பொருட்களை டோர் டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
அதன் சோதனை முயற்சி தற்சமயம் அரசினால் செயல்படுத்தப்பட்டு வெற்றி முடிவை எட்டியுள்ளது. அதனை அடுத்து அது மக்களுக்கு பயன்படும் படி ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இந்த திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கவிருக்கிறார். தமிழகம் முழுவதும் 16 லட்சம் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை டோர் டெலிவரி செய்ய இத்திட்டத்தின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இது மேலும் வரவேற்கத் தகுந்த ஒன்று என்று பலர் எதிர்பார்த்து உள்ளனர். ரேஷன் கடைகள் தொலைவு காரணமாக, வேலை பளு காரணமாக சில சூழ்நிலைகளால் ரேஷன் பொருட்கள் மாதந்தோறும் வாங்க தவறவிடும் குடும்பங்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். இந்த வெற்றி சோதனை திட்டம் எப்பொழுது முதல் நடைமுறை வரும் என்று பலர் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


