Cricket: இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது இந்த அணியில் பும்ரா இடம்பெறவில்லை இது குறித்து ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டியில் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது. இதில் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இங்கிலாந்து அணி முதல் போட்டியிலேயே வெற்றியை பதிவு செய்து முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் நேற்று இரண்டாவது போட்டி தொடங்கிய நிலையில் அணியின் பிளேயிங் லெவனில் இந்தியனின் வேத பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா இடம்பெறவில்லை. முதல் போட்டியில் மற்ற பந்துவீச்சாளர்களை விட நன்றாக பந்து வீசிய ஒரு ஜாம்பவான் பந்துவீச்சாளர் பும்ரா. இரண்டாவது போட்டிக்கு நடுவில் ஏழு நாட்கள் விடுமுறை இருந்தும் அவர் அணியில் இடம்பெறவில்லை.
இது குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி நீங்கள் உலகின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளரை வைத்துள்ளீர்கள் ஆனால் ஏழு நாட்கள் ஓய்வு கிடைக்கும் அவருக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை என்பதை என்னால் இதுவரை நம்ப முடியவில்லை நான் ஒருபோதும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கருத்து தெரிவித்துள்ளார்.