சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில் இந்தி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 2 சர்ச்சைகளில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது 21வது ஓவரில் பந்து வீசிய ரவீந்திர ஜடேஜா ஸ்மித் அடித்த பந்தை கிடைக்கும் என்று தவறவிட்டார் அப்போது ரன் எடுக்க முயன்ற போது நான் ஸ்டிரைக்கில் நின்ற மர்னஸ் லபுசானே வை ஜடேஜா ஓட விடாமல் பிடித்து வைத்துக் கொண்டார். இதனால் ரன் எடுக்க முடியாமல் போனது இதனைப் பார்த்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் கடுப்பாகி கத்தினார்.
நடுவரிடம் இது குறித்து தெரிவித்தார் ஜடேஜாவின் செயலை ஜாலியாக நினைத்து சிலர் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டு வரும் அதே வேளையில் அரையிறுதி போட்டியில் ரன் ஓட விடாமல் பிடித்து வைப்பது நியாயம் இல்லாத செயல் என கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் வசைப் பாடி வருகின்றனர்.
மேலும் 18 வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச வந்தபோது திடீரென ஜடேஜாவை நடுவர் தடுத்து நிறுத்தினார் ஜடேஜா ஏன் என கேட்க கையில் கட்டி இருக்கும் பேண்டேஜ் பந்தை சேத படுத்த வாய்ப்பு உள்ளதால் அதனை கழற்றி விட்டு பந்து வீசுமாறு கூறினார் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக ஜடேஜாவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் நடுவரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் பின்னர் கடுப்பான ஜடேஜா பேண்டேஜ் கழட்டி விட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியுள்ளது.



