இந்த முறை கோப்பையை பெங்களூரு பேர்ல எழுதுங்க!! அதிரடி காட்டிய RCB!!

rcb-in-action

cricket: பெங்களுரு மற்றும் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையே நேற்று முதல் குவாலிபயர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும்.

நடைபெற்று வரும் ipl தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. அனைத்து லீக் போட்டிகளும் முடிந்த நிலையில் தற்போது அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் மட்டுமே மீதமுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் குவாலிபயர் போட்டி பெங்களூரு மற்றும் பஞ்சாப் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்களுரு அணி முதலில் டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.

இதுவரை விளையாடிய போட்டியிகளில் அதிரடி காட்டிய பஞ்சாப் அணி நேற்று நடைபெற்ற போட்டியில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பஞ்சாப் அணி. அதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களுரு அணி 10 ஓவரில் இலக்கை அடைந்து இறுதி போட்டிக்கு நேரடியாக முன்னேறியது.

இந்த வெற்றியின் மூலம்பெங்களுரு அணி நான்காவது முறையாக இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. பதினெட்டு வருடங்களில் ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது பெங்களுரு அணி. இந்த முறை முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் முதல் கோப்பையை பெங்களுரு அணி வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். பஞ்சாப் அணிக்கு இரண்டாவது வாய்பாக குவாலிபயர் இரண்டாவது போட்டியில் விளையாட உள்ளது.  ஆனால் இந்த யார் பஞ்சாப் அணியுடன் மொத போவது என்பது இன்று இரவு நடக்கவுள்ள குஜராத் மற்றும் மும்பை இரு அணிகளுக்கு இடையேயான போட்டிக் பின் தெரிய வரும்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram