இந்த ஆண்டு தொடங்கிய ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில் யாரும் எதிர் பாராத விதமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வந்த காரணத்தால், ஐ பி எல் தொடர் நிறுத்தப்பட்டது. பல வருடங்களாக போராடி வரும் பெங்களூரு அணி இந்த வருடம் கோப்பை வெல்லும் என அணைத்து கிரிக்கெட் ரசிகர்களும் கூறி வந்த நிலையில் அதற்கு ஆப்பு வைத்துள்ளனர் வெளிநாட்டு வீரர்கள்.
பெங்களூரு அணியை பொறுத்த வரை இந்திய வீரர்களை விட வெளிநாட்டு வீரர்கள் தான் சிறப்பான பேட்டிங் மற்றும் பவுலிங்கை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால் இந்த போர் பதற்றம் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என சில காரணங்களுக்காக முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பவில்லை என்ற தகவல் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அதிக அடிவாங்கியது எந்த அணி என்று பார்த்தால் பெங்களூரு அணிதான்.
ஏனெனில் பெங்களூரு அணியில் அதிரடியாக விளையாடி வந்த பில்ப் சால்ட், ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட், லுங்கி ங்கிடி , லியாம் லிவிங்ஸ்டன், ஷெப்பர்ட் ஆகிய முக்கிய வீரர்கள் அடுத்து நடைபெற உள்ள லீக் போட்டிகள் மற்றும் அரையிறுதி, இறுதி என அணைத்து போட்டிகளிலும் இவர்கள் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மற்ற அணி ரசிகர்கள் குறிப்பாக சென்னை அணி ரசிகர்கள் பெங்களூரு அணியை கிண்டல் செய்து வருகின்றனர். இவர்கள் அணியில் இல்லை என்றால் அணியே இல்லை என கேலி செய்து வருகின்றனர்.