பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கிய WPL மகளிர் காண ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்களூரு அணி இதுவரை நான்கு போட்டிகள் விளையாடி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி மூன்று போட்டிகள் விளையாடி இரண்டு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்று ஆர் சி பி மற்றும் யூபி வாரியர் இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் யுபி வாரியர் சனி முதலில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 6 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்து களம் இறங்கிய வயட் ஹாட்ஜ் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எல்லிஸ் பெர்ரி 90 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இருந்து 180 ரன்கள் எடுத்தது பெங்களூர் அணி.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய யூபி வாரியர்ஸ் அணி 20 ஓவர் களுக்கு 180 ரன்கள் எடுத்தது இதில் கடைசி நேரத்தில் சோபி எலெக்ஸ்டோன் 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவருக்கு கொண்டு சென்றார். சூப்பர் ஓவரில் யூபி வாரியர்ஸ் அணி ஒரு ஓவருக்கு 8 ரன்கள் எடுத்தது. ஆனால் rcb அணி 4 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் யூபி வாரியர்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது. இன்று டெல்லி மற்றும் குஜராத் அணி மோத உள்ளது.





