Cricket: நேற்று நடந்த பெங்களூர் மற்றும் லக்னோ இரு அணிகள் இடையேயான கடைசி லீக் போட்டியில் இமாலய இலக்கை லக்னோ நிர்ணயித்த போதும் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது பெங்களூரு.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெற்ற வந்து முடிந்து இந்த தொடரின் கடைசி லீக் போட்டியானது நேற்று லக்னோ மற்றும் பெங்களூரு இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. போட்டியில் முதலில் பெங்களூர் அணி டாஸ்வென்று பவுலிங் செய்ய தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் கலம் இறங்கிய லக்னோ அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் பிரட்ஸ்கி இருவரும் களமிறங்கினர். இதில் பிரட்ஸ்க்கி 14 ரன்களில் ஆட்டமிழக்க மார்ஷ் அதிரடியாக விளையாடி வந்தார்.
முதல் விக்கெட்டை இழந்த லக்னோ அணி அடுத்த வீரராக கேப்டன் ரிஷப் பண்ட்டை களம் இறக்கியது. ரிஷப் பண்ட் களமிறங்கிய முதல் பந்தில் இருந்து அபார பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதனால் ஆட்டத்தின் இறுதி வரை நின்று சதம் விலாசினார். ஆட்டத்தின் முடிவில் 61 பந்துகளை எதிர் கொண்டு 118 ரன்கள் குவித்தார். மார்ச் 37 பந்துகளில் 67 ரன்கள் விலாசினார். இந்நிலையில் 20 ஓவர்களில் 227 ரன்கள் அடித்தது லக்னோ அணி.
தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி 18.4 ஓவரில் 230 ரன்கள் அடித்து அபார வெற்றியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக ஜித்தேஷ் சர்மா 85 ரன்களும் விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர். வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது பெங்களூர் அணி. அடுத்ததாக பெங்களூர் அணி பஞ்சாப் அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.