முதல் போட்டியிலேயே வெற்றியை சுவைத்த RCB!! பிலிப் சால்ட் அதிரடி ஆட்டம்!!

Cricket : பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிந்த இடையே முதல் ஐபிஎல் தொடர் போட்டியானது நேற்று நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியாக கொல்கத்தா மற்றும் பெங்களூர் இரு அணிகளும் மோதின. இதில் பெங்களூர் அணி அதிரடியாக விளையாடி தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றிகணியை பறித்துள்ளது. கடைசி வரை போராடி கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது.

முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் தேர்வு செய்து களமிறங்கியது. தொடக்க வீரர் டீ காக் பவுண்டரி அடித்து அதிரடியாக ஆரம்பிக்க அடுத்த பந்திலேயே கேட்ச் அவுட் ஆனார். தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே அவருடைய அசாத்திய பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 31 பந்துகளை எதிர் கொண்டு 56 ரன்கள் விலாசினார்.

20 ஓவர் முடிவு பெற்ற நிலையில் கொல்கத்தா அணியின் எண்ணிக்கை எட்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பெங்களூர் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களுக்கு களம் இறங்கிய பிலிப் சால்ட் பவுண்டரி சிக்ஸர் என அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். எதிர்முனையில் விராட் கோலியும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்க போட்டியினை 16. 2 ஓவர்களில் முடித்தது பெங்களூரு அணி. இதனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது பெங்களூர் அணி.

 

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram