மேட்டூர் அணை!!  44 வது முறை முழு கொள்ளளவை எட்டியது!! அபாய எச்சரிக்கை!! 

Reached full capacity for the 44th time

மேட்டூர்: காவிரி டெல்டா நீர் பாசனத்தின் ஜீவ நாடியாக மேட்டூர் அணை திகழ்கிறது. மேட்டூர் அணையானது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையில் அதிக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக 25ஆம் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த 25 ஆம் தேதி 112 அடியாக இருந்த நிலையில் தற்போது 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணை கட்டி 92 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 44 வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் மூன்று முறை மேட்டூர் அணை முழு கல் அளவு எட்டியது. நடப்பு ஆண்டில் முதல் முறையாக 120 அடியை எட்டியுள்ளது.மேட்டூர் அணை நிரம்பியதை தொடர்ந்து 16 பாலங்களில் நீர்வளத்துறை அதிகாரிகள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு மேட்டூர் அணையின் உபரி நீர் 16 மதகுகள் வழியாக திறக்கப்பட்டது.
தற்போது நான்கு பாலங்கள் வழியாக பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் 12 பழங்களின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்ட காரணத்தால் தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு  போன்ற 11 டெல்டா மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை அறிவித்துள்ளது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram