இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பாகிஸ்தான் பிரதமர் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மே மாதம் ஏழாம் தேதி அன்று இந்தியா பாகிஸ்தான் தாக்குதலில் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற திட்டத்தை இந்தியா தொடங்கியது.
இத்திட்டத்தின் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா. எல்லை தாண்டிய பயங்கரவாத பாகிஸ்தானின் ஆதரிப்பு நிறுத்தும் வரை சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க போவதாக இந்தியா அறிவித்திருந்தது. பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்கும் பாகிஸ்தானை ஆபரேஷன் சித்தூர் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்தில் மூழ்கியுள்ள பாகிஸ்தானை பற்றி இந்திய விவரித்து கூறியிருந்தது. பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினை “தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட்” அமைப்பு அமெரிக்கா சமீபத்தில் தடை விதித்தது.
ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்கு பின் டி ஆர் எப் பயங்கரவாத அமைப்பிற்கு அந்தஸ்து வழங்கப் போவதாக ஆதாரங்களை அமெரிக்காவிடம் வழங்கியது இந்தியா. இந்நிலையில் இங்கிலாந்து தூதர் ஜேன் மாரியோட் நேற்று பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப்-ஐ சந்தித்து பேசியுள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர்க்களத்துக்கு தணிக்க உதவியாக இருந்து இங்கிலாந்து ஷெரீப்க்கு நன்றி கூறியுள்ளார்.
அப்போது இந்தியாவுடன் நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். ஏற்கனவே பலமுறை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.