பாதுகாப்பு படை வீரர்கள் ரயில் கிளர்ச்சி படையினரால் கடத்தப்பட்டு இருக்கிறது. ரயிலை கடத்தியதாக அறிக்கை வெளியிட்ட பலூச் விடுதலை அமைப்பு மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் காவல்துறையினர் மீது அடிக்கடி இதுபோன்ற தாக்குதல் நடத்தி வருகிற சூழ்நிலையில் தான் மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலை தற்போது பலுசிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தியிருக்கிறார்கள்.
ஒரு ரயிலேயே தடம் புரளச் செய்து அந்த ரயிலில் இருந்த ராணுவத்தை சேர்ந்தவர்கள் மற்றும் காவல் துறையினர் உளவுத்துறையான ஐஎஸ்ஐ சேர்ந்தவர்கள் போன்ற பலரையும் பிடித்து வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். பொதுமக்களை விடுவித்து விட்டோம் குறிப்பாக பலுஸிஸ்தான் மக்களை விடுவித்து விட்டோம் மற்றும் பெண்கள் குழந்தைகளை விடுவித்து விட்டோம். ஆகவே தற்போது எங்கள் கட்டுப்பாட்டில் இருப்பது ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் ஐஎஸ்ஐ என அழைக்கப்படும் உளவுத்துறையை சேர்ந்தவர்கள் அதேபோல சென்றவர்கள் ஆண்ட்டி டெரரிசம் என அழைக்கப்படும் வகையை சேர்ந்தவர்கள் என அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
தற்போது 100 பணயக் கைதி உள்ளதால் இவர்களை எப்படி பாகிஸ்தான் அரசு மீட்கப்போகிறது எத்தகைய தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் கேள்விக்குறியாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலே இவர்களை காப்பதற்கு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால் பிடித்து வைத்திருப்பவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் எச்சரிக்கையாக இந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள். போராடி வருவதாக தெரிவித்துள்ள இந்த அமைப்புகள் பாகிஸ்தானுக்கு எதிராக மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் கிட்ட த்தட்ட 100 பேர் தற்போது எப்படி காப்பாற்றப்படுவார்கள் என்கிற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது.